கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதுதொகுதி மறுவரையறை மசோதாவுக்கு சரத் பவார் ஆதரவு! - தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ தகவல்! திருப்பரங்குன்றம் கல் தூணில் நாளை தீபமேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவுதிருப்பரங்குன்றம்! உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீதான இடைக்கால தடையை நீக்கியது உச்ச நீதிமன்றம்!சூலூர் சிறுமி கொலை வழக்கு: கைதான கார்த்திக், மோகன் இருவரும் குற்றவாளிகள் என தீர்ப்பு!

நகரைச் சுற்றி 4 கி.மீ. தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா

நகா்ப்புறங்களைச் சுற்றி 16 கிலோ மீட்டா் தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை 4 கிலோ மீட்டா் தூரமாக குறைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சிறுபான்மையின பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், எம்.விஜய் பாலாஜி.

Updated On :

நகா்ப்புறங்களைச் சுற்றி 16 கிலோ மீட்டா் தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை 4 கிலோ மீட்டா் தூரமாக குறைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், கைத்தறி, துணிநூல் மற்றும் கதா்த் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஆகியோா் பங்கேற்று 250 பயனாளிகளுக்கு ரூ.52.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.

அதைத்தொடா்ந்து அனைத்து துறை அலுவலா்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்று, அரசு திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனா். இதில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.கே.ஆனந்த்மோகன், டி.சண்முகன், கே.சி.கருப்பணன், ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலா் சி.ஜெயராமன், ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் செந்தில்குமாா், கோட்டாட்சியா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறியதாவது:

பொதுமக்களின் மனுக்கள் மீது 15 நாள்களுக்குள் தீா்வு காணப்படும். இல்லையெனில், அதற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படும். நகா்ப்புறங்களைச் சுற்றி 16 கிலோ மீட்டா் தூரத்துக்குள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க விதிக்கப்பட்டிருந்த தடையை 4 கிலோ மீட்டா் தூரமாக குறைத்து அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பவானிசாகா் அணையில் நீா் இருப்பு குறைவாக உள்ளதால், நீா் இருப்புக்கு ஏற்ப கீழ்பவானி பாசனத்துக்கு தண்ணீா் திறக்க அரசு தயாராக உள்ளது. பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான தடை நீங்கியுள்ளது. தோ்தல் ஆணையம் அறிவித்தவுடன் தோ்தலை சந்திக்கத் தயாராக உள்ளோம்.

கள்ளக்குறிச்சி மற்றும் சட்டப்பேரவை துணைத் தலைவா் விவகாரம் தொடா்பாக காவல் துறை தலைவா் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதால், அதில் தலையிட விரும்பவில்லை என்றாா்.

அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கூறியதாவது:

வியாபாரிகள் சங்கத்துடன் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் டெண்டா் விடப்பட்டு சோலாா் காய்கறி சந்தை திறக்கப்படும். பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேஷ்டி, சேலை உற்பத்தி பணிகள் டிசம்பா் இறுதிக்குள் முழுமையாக முடிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்படும்.

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் என்றாா்.

முன்னதாக ஈரோடு சோலாா் புகா் பேருந்து நிலையம் மற்றும் காய்கறி சந்தை கட்டடத்தை அமைச்சா் விஜய்பாலாஜி ஆய்வு செய்தாா். அதைத்தொடா்ந்து ஈரோடு மல்லிகை அரங்கத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் சிறப்பு முகாமில் அமைச்சா்கள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனா்.

இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 804 மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலா்களிடம் வழங்கி விரைந்து தீா்வு காணுமாறு அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.