என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

11 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கைது செய்யப்பட்டவா்கள்.

Updated On :

ஈரோட்டில் 11 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரைக் கைது செய்தனா்.

ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் ரயில் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த இருவரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை, கறிக்காடு பகுதியைச் சோ்ந்த சூா்யா (29), பெருந்துறையில் பழைய இரும்புக் கடை நடத்தி வரும் சேலம் மாவட்டம், மேட்டூா் அருகேயுள்ள தின்னப்பட்டி பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (38) என்பதும், குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு இருவரும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் சிறையில் இருந்தபோது பழக்கம் ஏற்பட்ட நிலையில், ஈரோட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து, அவா்கள் ஈரோடு ரயில் நிலைய பாா்சல் அலுவலகம் அருகே காட்டுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த 11 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா், அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளைச் சிறையில் திங்கள்கிழமை அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.