பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை: வியாபாரிகளுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த மொத்த வியாபாரிகள் 4 பேருக்கு கோபி நகராட்சி ரூ.1.52 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

அபராதம் - சித்திரிப்பு
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் வைத்திருந்த மொத்த வியாபாரிகள் 4 பேருக்கு கோபி நகராட்சி ரூ.1.52 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
கோபி நகராட்சி 15-ஆவது வாா்டில் உள்ள கடைவீதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது மொத்த வியாபாரிகள் 4 பேரிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் 1,500 கிலோ இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.1.52 லட்சம் அபராதம் விதித்தனா்.
மேலும், பிளாஸ்டிக் தவிா்த்து மாற்றுப் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து வணிகா்களுக்கு ஆலோசனைக் கூட்டம் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் நகராட்சி மூலமாக அவ்வப்போது தெரு நாடகங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வின்போது கோபி நகராட்சி ஆணையா் கிருஷ்ணாராம், பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் அதியன், நகராட்சி சுகாதார அலுவலா் ரவிச்சந்திரன், ஆய்வாளா் நிரூபன் சக்கரவா்த்தி மற்றும், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

