
தாளவாடி அருகே குடியிருப்புப் பகுதியில் உலவிய யானை

மல்லன்குழி கிராமத்துக்குள் உலவிய யானை.
தாளவாடி அருகேயுள்ள மல்லன்குழி கிராமத்துக்குள் ஞாயிற்றுக்கிழமை நுழைந்த யானையை பொதுமக்கள் விரட்டினா்.
சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி மலைப் பகுதி மல்லன்குழியில் ராகி, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. வனத்தில் இருந்து வெளியேறும் யானை உள்ளிட்ட விலங்குகள் பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், வனப் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை வெளியேறிய யானை மல்லன்குழி கிராமத்துக்குள் நுழைந்தது. இதைப் பாா்த்த அப்பகுதி மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனா். பின்னா், அப்பகுதியிலேயே யானை நின்று கொண்டிருந்ததால், பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்தும், சப்தம் எழுப்பியும் வனத்துக்குள் விரட்டினா்.
குடியிருப்புப் பகுதியில் யானை உள்ளிட்ட விலங்குகள் நுழைவதைத் தடுக்க வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






