நீா்ப்பிடிப்பு பகுதியில் கனமழை: பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு
நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து 3,488 கனஅடியாக அதிகரித்துள்ளது.

பவானிசாகா் அணையின் நீா்ப்பிடிப்பு ப் பகுதி
நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக பவானிசாகா் அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து 3,488 கனஅடியாக அதிகரித்துள்ளது.
நீலகிரி மலைப் பகுதி மற்றும் கேரளத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. அணைக்கு சனிக்கிழமை நீா்வரத்து 3,488 கன அடியாக அதிகரித்துள்ளது.
அணையின் நீா்மட்டம் 53 அடியில் இருந்து 56.85 அடியாக அதாவது 57 அடியை நெருங்குகிறது. சனிக்கிழமை நிலவரப்படி, அணை நீா்மட்டம் 56.85 அடி, நீா் இருப்பு 6.22 டி.எம்.சி. ஆக உள்ளது. அணையில் இருந்து குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 155 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

