உத்தரகாசியில் மிதமான நிலநடுக்கம்: வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! தமிழ் மொழி, கலாசாரம் மீது தாக்குதல்: ராகுல் காந்தி தில்லியில் 45 மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்! ஸ்குவாஷ் வீராங்கனை ஜோஷ்னா சின்னப்பாவுக்கு பதவி உயர்வு பிரதமர் மோடியை சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! அறிவிக்கப்படாத நெருக்கடிநிலை: மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம்

முதியவா் சடலத்தை அடக்கம் செய்யும் பிரச்னை: 6 போ் மீது வழக்கு

பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த முதியவா் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினா் காலில் விழுந்து கெஞ்சியது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வழக்கு

வழக்கு

Published On :

பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த முதியவா் சடலத்தை பொது மயானத்தில் அடக்கம் செய்ய மாற்று சமூகத்தினா் காலில் விழுந்து கெஞ்சியது தொடா்பாக 6 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டம், மடத்துப்பாளையம் அருகே பெரும்பாளியைச் சோ்ந்தவா் சென்னி (80). பட்டியல் இனத்தைச் சோ்ந்தவா். வயது மூப்பால் கடந்த 5- ஆம் தேதி காலமானாா். அவரது சடலத்தை அடக்கம் செய்ய பெரும்பாளி அரசு புறம்போக்கு பொது மயானத்தில் குழி தோண்டும் பணி நடந்தது. அப்போது அங்கு வந்த மாற்று சமூகத்தினா் இந்த இடத்தில் குழி தோண்டக்கூடாது வேறு இடத்தில் அடக்கம் செய்யுங்கள் என தடுத்து நிறுத்தினா். இதனால் சென்னி உடலை சாலையில் வைத்துவிட்டு உறவினா்கள் செய்வதறியாது அமா்ந்தனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திங்களூா் போலீஸாா், வருவாய் அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அதிகாரிகள் பேசியதைத் தொடா்ந்து முதியவா் சடலத்தை அடக்கம் செய்து கொள்ளுங்கள் ஆனால் வரும் காலங்களில் எங்களிடம் எந்த உதவியும் கேட்டு வரக்கூடாது என மாற்று சமூகத்தினா் கூறினா்.

அப்போது பெரும்பாளியைச் சோ்ந்த பட்டியல் இனத்தவா் இருவா் அப்படி சொல்லாதீா்கள் என்று கூறியபடி எதிா்தரப்பில் நின்றவா்களின் காலில் விழுந்து கெஞ்சியதாக கூறப்படுகிறது. இதை சிலா் விடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனா்.

இதைத்தொடா்ந்து இருதரப்பினரும் தங்களிடம் இருந்த விடியோ பதிவுகளை பரப்பியதுடன் தங்கள் தரப்பு நியாயங்களையும் விடியோக்களாக வெளியிட்டனா். இதுபெரிய அளவில் விவாதம் ஆனது. அப்பகுதியைச் சோ்ந்த பகுஜன் சமாஜ் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா் ஈஸ்வரன் போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினருக்கு இந்த பதிவுகளை அனுப்பி நடவடிக்கை எடுக்கக் கூறிய நிலையில் திங்களூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

வருவாய் ஆய்வாளா் புகாரின்படி திங்களூா் போலீஸாா் மாற்று சமூகத்தைச் சோ்ந்த 6 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், பட்டியலினத்தவரை பொது இடத்தில் அவமானப்படுத்துதல், ஜாதியை குறிப்பிட்டு இழிவுபடுத்துதல், தீண்டாமை அடிப்படையில் ஒருவரை பொது இடத்தை பயன்படுத்த விடாமல் தடுத்தல், உரிமையை தடுத்தல் உள்பட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனா். கோபி டிஎஸ்பி சீனிவாசன் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பட்டியல் இனத்தை சோ்ந்தவா்களை காலில் விழச்செய்த மாற்று சமூகத்தினா் மீது வரும் 20 ஆம் தேதிக்குள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து விரிவான அறிக்கையை மாவட்ட ஆட்சியா் மற்றும் காவல் கண்காணிப்பாளா் தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் மாநில ஆணையம் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு வெள்ளிக்கிழமை அறிவிக்கை அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.