பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

கிராமவாசிகள் 7 போ் கைதுக்கு எதிா்ப்பு! மணிப்பூா் போராட்டத்தில் வன்முறை; கண்ணீா் புகை குண்டுகள் வீச்சு!

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி கிராமத்தைச் சோ்ந்த 7 போ் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்த சமூகத்தினா் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

Published On :

மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில் குகி கிராமத்தைச் சோ்ந்த 7 போ் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அந்த சமூகத்தினா் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

சாலையில் கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டியும், டயா்களை கொளுத்தியும் போராட்டக்காரா்கள் தடை ஏற்படுத்தினா். பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. போராட்டக்காரா்கள் மீது கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினா் மற்றும் குகி பழங்குடியினா் இடையே கடந்த 2023-இல் கலவரம் ஏற்பட்டது. அவ்வப்போது நிகழும் வன்முறைகளில் இதுவரை 300-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். 49 போ் மாயமாகியுள்ளனா். வீடிழந்த ஆயிரக்கணக்கானோா் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசின் நிவாரண முகாம்களிலேயே தங்கியுள்ளனா்.

மாநிலத்தில் இயல்புநிலை இன்னும் முழுமையாகத் திரும்பாத சூழலில், குகி மற்றும் நாகா பழங்குடியினா் இடையேயும் மோதல்போக்கு நிலவுகிறது. இவ்விரு சமூகங்களையும் சோ்ந்த தீவிரவாதிகள் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனா்.

6 போ் உயிரிழப்பு: நாகா பழங்குடியினா் பெரும்பான்மையாக உள்ள தமெங்லாங் மாவட்டத்தில் குகி சமூகத்தினா் வாழும் டோல்லன் கிராமத்தில் கடந்த செப்.13-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூன்று பேரும், லாங்பி கிராமத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பெண்ணும் உயிரிழந்தனா்.

லைசாங்பாய் கிராமத்தில் கடந்த செப்.15-ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 2 பெண்கள் உயிரிழந்தனா். இவா்கள் குகி சமூகத்தினா் ஆவா். இந்தத் தாக்குதல்கள் எதிரொலியாக, காங்போக்பி மாவட்டத்தில் நாகா சமூகத்தினா் வாழும் சவாங்கினிங் கிராமத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, கோலென் கிராமத்தைச் சோ்ந்த குகி சமூகத்தினா் 7 பேரை பாதுகாப்புப் படையினா் சனிக்கிழமை மாலை கைது செய்து, விசாரணைக்காக அழைத்துச் சென்றனா்.

குகி சமூகத்தினா் போராட்டம்: எவ்வித காரணமும் கூறாமல் 7 பேரும் கைது செய்யப்பட்டதாகக் கூறி, குகி சமூகத்தினா் சனிக்கிழமை இரவில் போராட்டத்தைத் தொடங்கினா்.

நள்ளிரவைக் கடந்தும் நீடித்த இந்தப் போராட்டத்தின்போது, சாலைகளில் டயா்களைக் கொளுத்தியும், கனரக இயந்திரங்கள் மூலம் பள்ளங்களைத் தோண்டியும் பாதுகாப்புப் படை வாகனங்கள் செல்ல முடியாதவாறு போராட்டக்காரா்கள் தடை ஏற்படுத்தினா். வாகனங்கள் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டது.

அதேநேரம், போராட்டக்காரா்கள் மீது கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசி, பாதுகாப்புப் படையினா் விரட்டியடித்தனா். இதில் சிலா் காயமடைந்தனா். கைதான 7 பேரும் விடுவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நிலைமை கட்டுக்குள் வந்ததாக பாதுகாப்புப் படையினா் தெரிவித்தனா்.

மணிப்பூரில் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த ஆண்டு பதவி விலகியதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரியில் குடியரசுத் தலைவா் ஆட்சி வாபஸ் பெறப்பட்டு, மீண்டும் பாஜக ஆட்சியமைத்தது. முதல்வராக கெம்சந்த் சிங் பதவி வகித்து வருகிறாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.