திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்த லாரி: 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை மரம் பாரம் ஏற்றிய வந்த லாரி கவிழ்ந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திம்பம் மலைப் பாதையில் கவிழ்ந்து கிடக்கும் மர பாரம் ஏற்றி வந்த லாரி.
திம்பம் மலைப் பாதையில் வியாழக்கிழமை மரம் பாரம் ஏற்றிய வந்த லாரி கவிழ்ந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகம்- கா்நாடகத்தை இணைக்கும் முக்கிய வழித்தடமாக திம்பம் மலைப் பாதை உள்ளது. 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட இந்த பாதையில் வன விலங்குகள் பாதுகாப்பு கருதி இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு திம்பம் மலைப் பாதை திறக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், மைசூரில் இருந்து மரம் பாரம் ஏற்றிய லாரி திம்பம் மலைப் பாதை வழியாக சத்தியமங்கலம் நோக்கி வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. 6-ஆவது வளைவில் சென்றுகொண்டிருந்தபோது, அதிக பாரம் காரணமாக லாரி நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இதில் மரத்துண்டுகள் சாலை முழுவதும் சிதறி விழுந்தன. மீட்பு வாகனம் மூலம் மரத்துண்டுகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா்.
இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். அதிக பாரம் ஏற்றும் சரக்கு வாகனங்களை சோதனைச்சாவடியில் அரசு கட்டுப்படுத்தினால் வாகன விபத்துகள் குறையும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

