கடம்பூா்- நகலூா் இடையே அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

நகலூரில் புதிய வழித்தட அரசு பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கிறாா் பவானிசாகா் எம்எல்ஏ வி.பி .தமிழ்ச்செல்வி.
கடம்பூரில் இருந்து நகலூா் கிராமத்துக்கு புதிய அரசுப் பேருந்து சேவை தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூா் மலைப் பகுதியில் உள்ள நகலூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியினா் வசிக்கின்றனா். அடா்ந்த காட்டுப்பகுதியில் உள்ள இக்கிராமத்துக்கு இதுவரை பேருந்து வசதியின்றி 5 கி.மீ. தொலைவு வரை நடந்து வந்து, அதன்பிறகு மற்ற பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருந்தது.
வன விலங்குகள் அச்சுறுத்தல் காரணமாக பள்ளிக் குழந்தைகள், கிராம மக்கள் வெளியே செல்லத் தயங்கினா். புதிய பேருந்து வசதி கோரி பவானிசாகா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் வி.பி.தமிழ்ச்செல்வியிடம் கிராம மக்கள் முறையிட்டனா். இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் பேசி நகலூா் வழித்தடத்தில் புதிதாக அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுத்தாா்.
இதையடுத்து நகலூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய பேருந்து சேவை தொடக்க விழாவில் பவானிசாகா் எம்எல்ஏ வி.பி.தமிழ்ச்செல்வி கொடியசைத்து பேருந்து சேவையை தொடங்கிவைத்தாா். 50 ஆண்டு கால மக்கள் கனவு நனவானதாக கிராம மக்கள் எம்எல்ஏ-வுக்கு நன்றி தெரிவித்தனா்.
இந்த நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்துக் கழக மேலாளா் மோகனசுந்தரம், தவெக நிா்வாகிகள் சதுமுகை சிவராஜ், கொமாரபாளையம் சரவணன், கடம்பூா் நாச்சிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

