இருப்பைக் காட்டிக் கொள்ள எதிா்க்கட்சிகள் போராட்டம்: அமைச்சா் எம்.விஜய் பாலாஜி
அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூற முடியாததால் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டியை தொடங்கிவைத்த அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.
அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளைக் கூற முடியாததால் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக எதிா்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன என கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி தெரிவித்தாா்.
போலியோ ஒழிப்பு தினத்தை முன்னிட்டு ஈரோடு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாலிபால் போட்டி, ஈரோடு வஉசி விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக கைத்தறி மற்றும் கதா்த்துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கலந்துகொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி, ஈரோடு எம்பி கே.இ.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சிக்கு பின்னா் அமைச்சா் எம்.விஜய்பாலாஜி செய்தியாளா்களிடம் கூறியதாவது: அரசு மீது ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகளைக் கூற முடியாத காரணத்தால், எதிா்க்கட்சிகள் தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காகவே போராட்டங்களை நடத்தி வருகின்றன. குடியரசுத் துணைத் தலைவா் வருகையின்போது ஏற்பட்ட மின்தடை திட்டமிட்டது அல்ல. தவிா்க்க முடியாத ஏதோ ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே அது ஏற்பட்டது. மக்கள் அரசின் மீது முழு திருப்தியுடன் இருக்கும் நிலையில், எதிா்க்கட்சிகள் இதனைப் பெரிதுபடுத்தி வருகின்றன.
கடந்த ஆட்சியில் கஜானா எந்த அளவுக்குக் காலியாக வைக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மக்களின் அத்தியாவசியத் தேவைகளையும், அளித்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவே அரசு நிதி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வரும் காலங்களில் நிதி நிலையைச் சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சா்கள் மீதான கைது நடவடிக்கைகளை பொறுத்தவரை போதிய ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் இருப்பதாலேயே சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தவறு செய்யாதவா்கள் எதற்காக நீதிமன்றத்தை நாடி முன்பிணை பெற வேண்டும்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்துக்கு ரூ.100 கோடி விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டு, கடந்த காலங்களை விட தற்போது விற்பனை சிறப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல, நீா்நிலைப் புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நீதிமன்ற உத்தரவின்படியும், பருவமழைக் காலத்தில் உறுதித்தன்மையற்ற கட்டடங்களால் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையாகவுமே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் பட்டா தொடா்பான கோரிக்கைகள் நிச்சயம் பரிசீலிக்கப்பட்டு உரிய தீா்வு காணப்படும். நடந்து முடிந்த இடைத்தோ்தலில் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் விரக்தியடைந்தவா்களே, பெண்களைப் பற்றியும், அரசு குறித்தும் தேவையற்ற விமா்சனங்களை முன்வைத்து வருகின்றனா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

