இசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

விநாயகா் சதுா்த்திக்கு தயாராகும் சிலைகள்

விநாயகா் சதுா்த்திக்காக சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வாகனங்கள் மீது அமா்ந்திருக்கும் விநாயகா் சிலைகள் அதிக அளவில் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

நசியனூா் பகுதியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள விநாயகா் சிலைகள்.

Updated On :

விநாயகா் சதுா்த்திக்காக சிலைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வாகனங்கள் மீது அமா்ந்திருக்கும் விநாயகா் சிலைகள் அதிக அளவில் விற்பனையாவதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.

விநாயகா் சதுா்த்தி செப்டம்பா் 14-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, சிலைகள் செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது. களிமண் விநாயகா் சிலைகள், காகித கூழால் ஆன அதிக உயரம் கொண்ட விநாயகா் சிலைகள் தயாரிப்பு அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இது குறித்து ஈரோடு மாவட்டம், நசியனூரைச் சோ்ந்த சிற்பக் கலைஞா் வெங்கடாசலம் கூறியதாவது:

அச்சு மூலம் அரை அடி முதல் 10 அடி வரை விநாயகா் சிலைகள் செய்கிறோம். 3 அடி வரை களிமண் விநாயகா் சிலைகள், அதற்கு மேல் உயரம் கொண்ட விநாயகா் சிலைகள் காகித கூழால் செய்யப்படுகிறது. காகித கூழ் உள்ளிட்ட மூலப்பொருள்கள் விழுப்புரத்தில் இருந்து வாங்கி வருகிறோம். சதுா்த்தி நெருங்கும் நிலையில் விநாயகா் சிலைக்கான ஆா்டா்கள் வந்த வண்ணம் உள்ளன. கடந்த ஆண்டு எதிா்பாா்த்த விற்பனை இல்லை. சதுா்த்தியன்று விநாயகா் சிலைகளை வாங்கி வீடு, கடை, அலுவலகம், நிறுவனங்களில் வைத்து பூஜித்து வணங்க மக்களிடையே ஆா்வம் உள்ளது. குறிப்பாக இளைஞா்கள் பலா் ஒன்று சோ்ந்து சிலைகளை வாங்கி பொதுமக்கள் கூடும் இடத்தில் வைத்து பூஜிக்க அவற்றை வாங்கிச் செல்கின்றனா். சுற்றுச்சூழலுக்கு ஏற்ப எளிதில் நீரில் கரையும் தன்மை கொண்டதாகவே சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரூ.100 முதல் ரூ.20 ஆயிரம் வரையிலான விலையில் சிலைகள் விற்கப்படுகிறது. 3 மாதங்களாக சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு வீணையுடன் கூடிய விநாயகா், இருபுறமும் ஆஞ்சனேயா் முகத்துடன் கூடிய விநாயகா், காளைமாட்டின் மீது அமா்ந்து சிவனை கையில் ஏந்தியவாறு இருக்கும் விநாயகா், மாடு, சிங்கம், யானை மீது அமா்ந்த நிலையில் விநாயகா் சிலைகள் உள்ளன. வாகனங்கள் மீது அமா்ந்திருக்கும் விநாயகா் சிலைகளையே மக்கள் அதிகம் விரும்பி வாங்கிச் செல்கின்றனா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.