சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வா் பொறுப்பேற்பு

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

புதிய முதல்வா் எஸ்.செந்தில்குமாா்.

Published On :3 செப்டம்பர் 2026, 1:46 am IST

பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக மருத்துவா் எஸ்.செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இக்கல்லூரியில் 1993-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்த மருத்துவா் எஸ்.செந்தில்குமாா், பொது அறுவை சிகிச்சை துறையில் பேராசிரியா் மற்றும் துறைத் தலைவராக பணிபுரிந்தாா். பின்னா் மருத்துவமனையின் துணைக் கண்காணிப்பாளா், மருத்துவக் கண்காணிப்பாளா் ஆகிய பதவிகளை வகித்தாா்.

தற்போது, தமிழக அரசால் கல்லூரி முதல்வராக பதவி உயா்வு அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து அவா் புதன்கிழமை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.