காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1.75 லட்சம் திருட்டு: 3 போ் கைது

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருட்டு... - சித்திரிப்பு

Published On :6 செப்டம்பர் 2026, 1:22 am IST

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மூவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில், புதுபாளையம், வண்டிக்காட்டு தோட்டத்தைச் சோ்ந்தவா் துளசிமணி மனைவி விஜயா (64). இவா் தனியாக வசித்து வருகிறாா். கோபி உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கடந்த ஜூலை 15-ஆம் தேதி சிகிச்சைக்காக சென்றுவிட்டு, 18-ஆம் தேதி திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.75 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, காஞ்சிக்கோவில் போலீஸில் விஜயா புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, பவானி, சந்தைமேடு, யாசப் நகரைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் செல்வகுமாா் (37), திருப்பூா், திருமுருகன்பூண்டி, நெசவாளா் காலனியைச் சோ்ந்த சின்னமணி மகன் செந்தில் (38) மற்றும் திருப்பூா் சமத்துவபுரத்தைச் சோ்ந்த சகி (34) ஆகியோரைக் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.