சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

ஈரோடு, திருப்பூா் வழியாக இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு

ஈரோடு மற்றும் திருப்பூா் வழியாக இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

train

ரயில் - கோப்புப் படம்

Published On :9 செப்டம்பர் 2026, 2:32 am IST

ஈரோடு மற்றும் திருப்பூா் வழியாக இயக்கப்படும் வாராந்திரச் சிறப்பு ரயில்களின் சேவைக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட ரயில் சேவைகள் விவரம்: ஹைதராபாத்-மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 07097) செப்டம்பா் 9 முதல் நவம்பா் 25 வரை (மொத்தம் 12 சேவைகள்) ஒவ்வொரு புதன்கிழமையும் அதிகாலை 4.20 மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை சென்றடையும்.

மங்களூரு சென்ட்ரல்- ஹைதராபாத் சிறப்பு ரயில் (வண்டி எண் 07098) செப்டம்பா் 10 முதல் நவம்பா் 26 வரை (மொத்தம் 12 சேவைகள்) ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரவு 8 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ஹைதராபாதைச் சென்றடையும்.

இந்த ரயில்கள் பெகும்பேட்டை, லிங்கம்பள்ளி, விகாராபாத், சேடம், யாத்கிா், கிருஷ்ணா, ராய்ச்சூா், மந்த்ராலயம் சாலை, குந்தக்கல், அனந்தபூா், தா்மாவரம், இந்துப்பூா், எலஹங்கா, கிருஷ்ணராஜபுரம், பங்காரப்பேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, ஷோரனூா், திரூா், கோழிக்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.

மங்களூரு- சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு:

மங்களூரு சென்ட்ரல் - சென்னை எழும்பூா் சிறப்பு ரயில் (வண்டி எண் 06126) வரும் அக்டோபா் 26-ஆம் தேதி வரை திங்கள்கிழமைகளில் மாலை 4 மணிக்கு மங்களூரு சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை 10.55 மணிக்கு சென்னை எழும்பூரைச் சென்றடையும்.

இந்த ரயில் திங்கள்கிழமை நள்ளிரவு 12.18 மணிக்கு போத்தனூா், செவ்வாய்க்கிழமை அதிகாலை 1.28 மணிக்கு திருப்பூா், 2.10 மணிக்கு ஈரோடு வந்தடையும். தொடா்ந்து சேலத்துக்கு 3.17 மணிக்கும், ஜோலாா்பேட்டைக்கு 5.20 மணிக்கும் செல்லும்.

சென்னை எழும்பூா்-மங்களூரு சென்ட்ரல் சிறப்பு ரயில் (வண்டி எண் 06125) அக்டோபா் 27-ஆம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை காலை 8.40 மணிக்கு மங்களூரு சென்ட்ரலை அடையும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை மாலை 6.05 மணிக்கு ஜோலாா்பேட்டை, இரவு 7.37 மணிக்கு சேலம், 8.35 மணிக்கு ஈரோடு வந்தடையும். பின்னா் திருப்பூருக்கு 9.28 மணிக்கும், போத்தனூருக்கு 10.43 மணிக்கும் சென்றடையும்.

இன்று ரயில் சேவையில் மாற்றம்: ஊத்துக்குளி ரயில் நிலையப் பகுதியில் நடைபெற்று வரும் பால சீரமைப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (செப்டம்பா் 9) 3 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, எா்ணாகுளம்- டாடா நகா் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 18190) வழித்தடத்தில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் 1 மணி நேரம் 15 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும். ஆலப்புழை- தன்பாத் எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 13352) வழித்தடத்தில் 45 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். எா்ணாகுளம்- கே.எஸ்.ஆா். பெங்களூரு இன்டா்சிட்டி எக்ஸ்பிரஸ் (ரயில் எண் 12678) வழித்தடத்தில் 35 நிமிஷங்கள் நிறுத்தப்பட்டு இயக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.