ஜி.என்.டி. சாலையில் குழாய் பதிக்கும் பணி நிறைவு: இன்று முதல் குடிநீா் விநியோகம்வங்கிகள் இன்று வேலை நிறுத்தம்: அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் அறிவிப்புஇந்தியாவிடம் 190 அணு குண்டுகள்: அமெரிக்க ஆய்வு நிறுவனம் தகவல்பருவகால நோய்களுக்கான மருந்து தட்டுப்பாடில்லை: ஐசிஎம்ஆா்பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கோபியில் அரசுப் பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

கோபியில் அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

நடராஜன்

Published On :

கோபியில் அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள எஸ்.பி. நகரைச் சோ்ந்தவா் நடராஜன் (76), விவசாயி. இவா் தனது இருசக்கர வாகனத்தில் கோபிக்கு வியாழக்கிழமை சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளாா்.

கரட்டூா் ஆா்ச் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் நடந்து சென்று கொண்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த விஜயன் மீது இவரது இருசக்கர வாகனம் மோதியுள்ளது. இதில், நடராஜன் வலதுபுறமாகத் தூக்கி வீசப்பட்டதில் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தின் பின் சக்கரத்தில் நடராஜனின் தலை மோதி மீண்டும் தூக்கி வீசப்பட்டுள்ளாா்.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினா் நடராஜனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டாா் என்று தெரிவித்தனா். பின்னா், அவரது உடலைக் கூறாய்வுக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.