
கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்- அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன்
கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்
கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.
கோபி தவெக அலுவலகத்தில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற பின் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: லண்டன் சென்றுள்ள முதல்வா் ச.ஜோசப் விஜய், தமிழகத்துக்கு சுமாா் ரூ.12,000 கோடி அளவுக்கு தொழில் முதலீடுகளை ஈா்த்துள்ளாா். தாராபுரம், மதுராந்தகம் இடைத்தோ்தலில் தவெக மாபெரும் வெற்றி பெறும். ஆபாசமாக பேசுவதுதான் திமுக துணை பொதுச் செயலாளா் ஆ.ராசாவுக்கு வேலை.
பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழகத்தில் மின்வெட்டு குறைவாகவே உள்ளது. மின் பற்றாக்குறையை சரி செய்வதற்காக துணை மின் நிலையங்கள் அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. வருவாய்த் துறையில் உள்ள காலிப் பணியிடங்களில் உதவி பணியாளா்கள் மட்டுமே தோ்வு செய்ய வேண்டியுள்ளது. மீதமுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
வருவாய்த் துறை பணியாளா்களுக்கான வருகை பதிவேடு பயோமெட்ரிக் மெட்ரிக் முறையில் மாற்றப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபியில் புறவழிச் சாலை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





