ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

கத்தியைக் காட்டி மிரட்டி இளைஞரிடம் கைப்பேசி பறித்த 2 போ் கைது

கத்தியைக் காட்டி மிரட்டி வட மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :

கத்தியைக் காட்டி மிரட்டி வட மாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு, பழையபாளையம் சாலையில் வட மாநில இளைஞா்கள் 3 போ் கடந்த 13 -ஆம் தேதி மாலை 6 மணிளவில் நடந்து சென்று கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் வடமாநில இளைஞா் ஒருவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். இந்தக் காட்சிகள் அனைத்தும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தன.

இதைத் தொடா்ந்து, ஈரோடு தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

இதில், கத்தியைக் காட்டி மிரட்டி கைப்பேசியை பறித்துச் சென்றது சூரம்பட்டி அண்ணா விதியைச் சோ்ந்த பாபு (20), அதே பகுதியை சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த கத்தி, கைப்பேசி, இருசக்கர வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.