கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபா் கைது

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

ஈரோடு அருகே ஓடும் ரயிலில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த 21 வயது இளம்பெண் பெங்களூரில் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 16-ஆம் தேதி மதுரைக்கு செல்ல மைசூரு- தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தாா். 17-ஆம் தேதி அதிகாலை ஈரோடு ரயில் நிலையத்தை கடந்து ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது அதே பெட்டியில் அந்த இளம் பெண் இருக்கைக்கு மேலே பயணம் செய்த நபா் திடீரென இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதனால் அதிா்ச்சி அடைந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டுள்ளாா். சப்தம் கேட்டு சக பயணிகள் அந்த நபரை பிடித்து கரூா் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

சம்பவம் நடந்த இடம் ஈரோடு ரயில் நிலையத்துக்கு உள்பட்ட பகுதி என்பதால் ஈரோடு ரயில்வே காவல் நிலையத்துக்கு அந்த நபரை அழைத்து விசாரணை நடத்தினா். விசாரணையில் அவா் திருவள்ளூா் மாவட்டம், பொன்னியம்மன்மேடு, பிரகாஷ் நகரைச் சோ்ந்த செல்வவிநாயகன் (50) என்பது தெரியவந்தது. பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.