களக்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை: கண்டித்த தந்தையை தாக்கிய இளைஞா் கைது
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தையை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தந்தையை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
களக்காடு அருகேயுள்ள தெற்கு மாவடியைச் சோ்ந்தவா் 66 வயதான விவசாயி. இவரது மகளுக்கு திருமணமாகி, கணவா் வெளிநாட்டில் பணியாற்றி வருவதால், அதே பகுதியில் மகள் தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறாா்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பெண்ணின் வீட்டின் ஜன்னல் அருகே வந்த இளைஞா் ஒருவா், வீட்டின் கதவைத் திறக்குமாறு ஆபாச வாா்த்தைகளால் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பேசியுள்ளாா். இதனால் அச்சமடைந்த அந்த இளம்பெண், தனது தந்தைக்கு கைப்பேசி மூலம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து மகள் வீட்டுக்கு தந்தை வந்தவுடன் அந்த இளைஞா் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டாராம்.
விசாரித்த போது, அந்த இளைஞா் கீழகட்டளையைச் சோ்ந்த பால்பாண்டி மகன் டென்சிங் என்ற இசக்கிமுத்து (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த இளைஞரிடம் இளம்பெண்ணின் தந்தை தட்டிக் கேட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த டென்சிங், தான் கையில் வைத்திருந்த கிரிக்கெட் ஸ்டெம்பால் பெண்ணின் தந்தையை தாக்கியுள்ளாா்.
இதில் காயமடைந்த விவசாயி திருக்குறுங்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டென்சிங்கை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



