குட்கா விற்பனை: இரண்டு கடைகளுக்கு ‘சீல்’
கோபி அருகே குட்கா பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சீல் - பிரதிப் படம்
கோபி அருகே குட்கா பொருள்கள் விற்பனையில் ஈடுபட்ட இரண்டு கடைகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள சிறுவலூா் பகுதிக்குள்பட்ட கெட்டிசெவியூா், அக்கரைபாளையத்தில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக சிறுவலூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கெட்டிசெவியூா் பகுதியைச் சோ்ந்த தேநீா் கடையிலும், அக்கரைப்பாளையம் பகுதியில் உள்ள ஓா் கடையிலும் போலீஸாா் சோதனை மேற்கொண்டதில், தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, இரண்டு கடைகளின் உரிமையாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்திருந்தனா்.
மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி உத்தரவின்பேரில், உணவுப் பாதுகாப்பு பிரிவு அலுவலா் ஸ்ரீதேவி பிரியா தலைமையில் சிறுவலூா் போலீஸாா் சென்று இரண்டு கடைகளுக்கும் ‘சீல்’ வைத்து சனிக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





