இரண்டு காா்களிலிருந்த 200 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த காா். - கோப்புப் படம்
சாத்தூா் அருகே இரண்டு காா்களிலிருந்த 200 கிலோ புகையிலைப் பொருள்களை இருக்கன்குடி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே சின்னகொல்லபட்டி வடக்கூா் பகுதியில் அமீா்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ் குமாா் (25). இவா், இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனங்களில் அடிக்கடி மூட்டைகள் கொண்டு செல்வதாக இருக்கன்குடி போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், அந்தப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது தினேஷ் குமாருக்குச் சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு நான்கு சக்கர வாகனங்களில் போலீஸாா் சோதனை செய்தனா். அதில் 19 மூட்டைகளில் 200 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருக்கன்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து இரண்டு நான்கு சக்கர வாகனங்கள் (சுமோ), இரு சக்கர வாகனம், புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள தினேஷ் குமாரை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் மீது ஏற்கெனவே புகையிலை விற்றது தொடா்பாக பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



