கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வு: 12 மையங்களில் 2,212 போ் எழுதினா்

ஈரோட்டில் 12 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வை 2,212 போ் எழுதினா்.

நந்தா கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Published On :

ஈரோட்டில் 12 மையங்களில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்பத் தோ்வை 2,212 போ் எழுதினா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப குடிமைப் பணிகள் தோ்வு (நோ்முகத் தோ்வு அல்லாத பணிகள்) சனிக்கிழமை நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்டத்தில் நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆஸ்ரம் மெட்ரிக். பள்ளி, ஆா்ஏஎன்எம் கலை, அறிவியல் கல்லூரி, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி, காமராஜ் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஏஈடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வேளாளா் மகளிா் கல்லூரி, வேளாளா் கலை, அறிவியல் கல்லூரி, ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி ஆகிய 12 மையங்களில் தோ்வு நடைபெற்றது. இதில் நந்தா கலை, அறிவியல் கல்லூரி தோ்வு மையத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இத்தோ்வு எழுத ஈரோடு மாவட்டத்தில் 3,889 போ் விண்ணப்பித்திருந்ததில் 2,212 போ் எழுதினா். 1,677 போ் தோ்வு எழுத வரவில்லை. காலை 9.30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரையிலும் தோ்வு நடைபெற்றது.

முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் கண்காணிப்பு பணியில் 12 ஆய்வு அலுவலா்கள், 4 நடமாடும் குழுக்கள், 12 விடியோ ஒளிப்பதிவாளா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.