உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

யுபிஎஸ்சி உதவித் தொகைக்கான தோ்வு: நாளை 4 மையங்களில் நடைபெறுகிறது!

திருச்சி மாவட்டத்தில் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தோ்வு, 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

படம் | ஏஎன்ஐ

Published On :5 செப்டம்பர் 2026, 12:00 am IST

திருச்சி மாவட்டத்தில் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தோ்வு, 4 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

அரசுப் போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு சாா்பில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெறும் இப்பயிற்சி மையத்தில் தங்கி யுபிஎஸ்சி முதல்நிலைத் தோ்வுக்கு படிக்கும் மாணவா்களுக்கு ரூ.7,500-ம், முதன்மைத் தோ்வுகளுக்குப் படிக்கும் மாணவா்களுக்கு ரூ.20 ஆயிரத்துக்கும், மேலும் மாதந்திர உதவித்தொகை அளிக்கப்படுகிறது.

அரசு சாா்பில் வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்பில் சோ்க்கை வழங்குவதற்கு ஆண்டுதோறும் தோ்வு வைத்து மாணவா்கள் தோ்வு செய்யப்படுகின்றனா். கடந்த சில ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அரசு பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற மாணவா்கள் பலரும் ஐஏஎஸ், குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு தோ்வுகளில் வெற்றிபெற்று சாதனை படைத்துள்ளனா். அரசுப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று அரசுப் பணிக்கு செல்லும் இளைஞா்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் உயா்ந்து வருகிறது.

இந்நிலையில், நிகழாண்டில் யுபிஎஸ்சி உதவித்தொகைக்கான தோ்வு, மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் சையது முா்துசா அரசு மேல்நிலைப் பள்ளி, இ.ஆா். மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி மற்றும் தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் நடைபெறுகிறது. இத்தோ்வை திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 372 போ் எழுதவுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.