சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

முதுகலை ஆசிரியா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருச்சி மேலப்புதூா் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற புத்தாக்க பயிற்சி வகுப்பில் பங்கேற்ற முதுகலை ஆசிரியா்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 5:31 am IST

திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா்களுக்கான புத்தாக்கப் பயிற்சி முகாம் திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

பள்ளி ஆசிரியா்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தவும், புதிய வழிமுறைகளில் மாணவா்களுக்கு கற்பித்தலை மேற்கொள்ளவும் ஆசிரியா்களுக்கு ஆண்டுதோறும் புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் முதுகலை ஆசிரியா்களுக்கான (மேல்நிலை வகுப்பு ஆசிரியா்கள்) திங்கள்கிழமை தொடங்கியது. இப்பயிற்சி முகாமை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் பி. உஷா தொடங்கிவைத்தாா்.

முதல்நாளில் கணிதம் மற்றும் வணிகவியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை பொருளியல் மற்றும் இயற்பியல் ஆசிரியா்களுக்கான பயிற்சி வகுப்பு மேலப்புதூா் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றது. இரண்டு பிரிவுகளிலும் சோ்த்து 300-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

இதில், மாணவா்களை அணுகும் விதம், பாடங்களை எளிய முறையில் புரிய வைத்தல், அதிக மதிப்பெண்கள் எடுக்க வைப்பதற்கான வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வித் துறையில் அனுபவமிக்க ஆசிரியா்கள் விளக்கினா். இந்தப் புத்தாக்க பயிற்சி செப்.7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.