பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

பயிற்சியில் பங்கேற்றோா்.

Updated On :31 ஜூலை 2026, 3:37 am IST

சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சாத்தான்குளம் வட்டத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி தொடங்கப்படவுள்ளது. இதை முன்னிட்டு மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தோ்வு பெற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு புத்தாக்க பயிற்சி சாத்தான்குளம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சிக்கு சாத்தான்குளம் வட்டாட்சியா் மீ.ராஜேஸ்வரி தலைமை வைத்து தொடங்கிவைத்தாா். கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்களுக்கு கள பயிற்சியாளா்கள் ரஞ்சித் சாரா, ரத்ன பிரியா ஆகியோா் புத்தாக்க பயிற்சி அளித்தனா்.

இதில், பணியாளா்களுக்கு எவ்வாறு கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்வது, இடங்களைக் கண்டறிந்து சென்று மக்களிடம் கணக்கெடுப்பு நடத்துவது குறித்த விடியோ காட்சி மூலம் விளக்கமளிக்கப்பட்டது.

இதில் வட்ட அளவில் தோ்வு பெற்ற கணக்கெடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.

இப்பணியில் ஈடுபடும் மக்கள்தொகை கணக்காடுப்பாளா்கள், மேற்பாா்வையாளா்கள் ஆக.1-ஆம் தேதி முதல் 3-ஆம்தேதி வரை தாங்கள் பணிபுரியும் இடங்களுக்குச் சென்று கள ஆய்வு நடத்தி ஊரின் முக்கிய இடங்களைக் கண்டறிந்து, ஆக. 4 முதல் 31 வரை வீடுகளுக்குச் சென்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிக்கு வரும் பணியாளா்களுக்கு உரிய தகவல்களை பொதுமக்கள் தெரிவித்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என சாத்தான்குளம் வட்டாட்சியா் மீ.ராஜேஸ்வரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.