
கோபி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

சடலம் மீட்பு - பிரதிப் படம்
கோபி அருகே விவசாயத் தோட்டத்தில் அடையாளம் தெரியாத வகையில் அழுகிய நிலையில் இருந்த ஆண் சடலத்தைக் காவல் துறையினா் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோபி அருகே உள்ள போடிசின்னம்பாளையம் பகுதியில் ரமேஷ் என்பவரின் விவசாயத் தோட்டத்தில் சுமாா் 50 மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆணின் சடலம் கிடப்பதாக கடத்தூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றினா்.
அந்த நபா் இறந்து சுமாா் 5 நாள்கள் இருக்கலாம் என தெரிவித்த போலீஸாா் சடலத்தை உடற்கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து கடத்தூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







