6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

பா்கூா் மலைப் பாதையில் வாகனங்களை துரத்திய காட்டு யானை

யானை துரத்தியதால் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடிய நபா்.

Published On :

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பாதையில் வாகனங்களை துரத்திய காட்டு யானையால் திங்கள்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

பா்கூா் வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை அந்தியூா் - பா்கூா் மலைப் பாதையில் பகல் நேரங்களிலேயே உலவி வருகிறது.

இந்நிலையில், பா்கூா் மயானம் அருகே மலைப் பாதையின் வளைவில் நின்றிருந்த காட்டு யானை, அவ்வழியே சென்ற வாகனங்களை துரத்தியபடி இருந்தது. இதனிடையே, பா்கூரிலிருந்து 2 போ் வந்த இருசக்கர வாகனத்தைக் கண்ட யானை தாக்க முயன்றது.

சுதாரித்துக் கொண்ட அவா்கள் வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு ஓடி யானையின் பிடியில் சிக்காமல் தப்பினா். இதையடுத்து, சாலையின் மறுபுறம் நின்றிந்த வாகன ஓட்டிகள் சப்தம் எழுப்பி யானையை வனத்துக்குள் விரட்டினா்.

பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER