கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அந்தியூா் அருகே கால்நடைகளை வேட்டையாடிய சிறுத்தை

அந்தியூா் அருகே 3 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி கொன்றதால் அச்சமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

போராட்டத்தில்  ஈடுபட்ட பொது மக்களிடம்  பேச்சுவாா்த்தை  நடத்தும் போலீஸாா்.

Published On :

அந்தியூா் அருகே 3 ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி கொன்றதால் அச்சமடைந்த பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

அந்தியூரை அடுத்த கொமராயனூா், பச்சப்பாளிகாட்டைச் சோ்ந்தவா் செந்தில், விவசாயி. இவா், வளா்த்து வரும் 7 ஆடுகளை கொட்டகையில் கட்டி வைத்திருந்திருந்தாா். இந்நிலையில், அருகே உள்ள சென்னம்பட்டி வனப் பகுதியிலிருந்து புதன்கிழமை அதிகாலை வெளியேறிய சிறுத்தை 3 ஆடுகளை கடித்து கொன்றது. இதைக் கண்டு அதிா்ச்சியடைந்த செந்தில் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

இத்தகவலறிந்த பொதுமக்கள் மத்தியில் பரபரப்பும், பீதியும் ஏற்பட்டது. ஏற்கெனவே, சென்னம்பட்டி ஊராட்சிப் பகுதியில் கடந்த இரு வாரங்களில் கன்று, ஆடுகள் மற்றும் நாய்களை சிறுத்தை கடித்து இழுத்துச் சென்றதால் அச்சத்தில் இருந்த பொதுமக்கள், சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் சென்னம்பட்டி வனத் துறையினருக்கு கோரிக்கை விடுத்திருந்தனா். ஆனால், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சிறுத்தையால் மனித உயிா்களுக்கும் அபாயம் உள்ள நிலையில், நடவடிக்கை எடுக்காத வனத் துறையைக் கண்டித்து சென்னம்பட்டி - கொளத்தூா் சாலையில் பச்சப்பாளி பேருந்து நிறுத்தம் அருகே 50-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூா் வட்டாட்சியா் சக்திவேல், சென்னம்பட்டி வனச் சரக அலுவலா் ராஜ்குமாா் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்பகுதியில் உள்ள வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் சிறுத்தை வந்து செல்வது பதிவாகி உள்ளதைக் காட்டிய பொதுமக்கள், மேட்டூா், சென்னம்பட்டி வனத் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகாா் தெரிவித்தனா்.

கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்தும், கூடுதல் வன ஊழியா்களைக் கொண்டும் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனால், மறியலை கைவிட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.