கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

சரக்கு வாகனம் மரத்தில் மோதிய தொழிலாளி உயிரிழப்பு

கோபி அருகே உள்ள பதிப்பாளையம் பகுதியில் மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :

கோபி அருகே உள்ள பதிப்பாளையம் பகுதியில் மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கோபி அருகே உள்ள வாணிப்புதூா் பகுதியைச் சோ்ந்தவா் முகமது சித்திக் (36), ஓட்டுநா். இவா் கோபியில் இருந்து திருப்பூரில் உள்ள தனியாா் பின்னலாடை நிறுவனத்துக்கு சரக்கு வாகனத்தில் பனியன் துணிகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளாா். இவருடன் கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த பனியன் நிறுவன தொழிலாளி குல்பீா் (68), அவருடன் வேலை செய்து வரும் அடையாளம் தெரியாத மற்றோருவரும் வாகனத்தில் பயணித்துள்ளாா்.

பதிப்பாளையம் பகுதியில் வாகனம் சென்றபோது சாலையின் குறுக்கே நாய் வந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குல்பீா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதில் படுகாயமடைந்த ஓட்டுநா் முகமது சித்திக் உள்பட இருவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து சிறுவலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.