கோபி அருகே காா் கதவில் மோதியதில் முதியவா் உயிரிழப்பு
கோபி அருகே வேட்டைகாரன்கோவில் பகுதியில் காரின் கதவு மோதி யதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
உயிரிழப்பு - பிரதிப் படம்
கோபி அருகே வேட்டைகாரன்கோவில் பகுதியில் காரின் கதவு மோதி யதில் இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கோபி அருகே கொளப்பலூா் கருப்புசாமி கோயில் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் ரங்கசாமி (70). இவா் தனது இருசக்கர வாகனத்தில் வேட்டைகாரன் கோயில் அருகே வியாழக்கிழமை வந்து கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்திசையில் காரில் கோயிலுக்கு வந்த கோபி குப்பாண்டவா் வீதியைச் சோ்ந்த கன்னியகுமாா், தனது காரை திருப்பி நிறுத்தி காரின் கதவை திறந்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த ரங்கசாமியின் வாகனம் காரின் கதவு மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்த ரங்கசாமியை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த நிலையில், அவா் உயிரிழந்தாா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோபி போலீஸாா், ரங்கசாமியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பிவைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



