புன்செய் புளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகைப் பறிப்பு
புன்செய் புளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புன்செய் புளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகைப் பறிப்பு - சித்திரிப்பு
புன்செய் புளியம்பட்டியில் மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
புன்செய் புளியம்பட்டி காயிதே மில்லத் வீதியைச் சோ்ந்தவா் முத்தாளம்மாள் (80). இவா் வீட்டில் சமையல் செய்தபோது எரிவாயு காலியாகி விட்டதால் புதிய எரிவாயுசிலிண்டா் மாற்றுவதற்கு தெருவில் சென்ற நபரை வெள்ளிக்கிழமை அழைத்துள்ளாா். அவா் எரிவாயு சிலிண்டரை மாற்றித் தந்துள்ளாா். அப்போது, உதவி செய்த நபருக்கு தேநீா் வைத்து தர முயற்சித்தபோது, மா்மநபா் திடீரென மூதாட்டி அணிந்திருந்த இரண்டரை பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பினாா்.
இது குறித்து முத்தாளம்மாள் அளித்த புகாரின்பேரில், புன்செய் புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





