பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்ச்சி

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வோ்களிலிருந்து உயா்வோம்’ என்ற கருப்பொருளில் டெட் விஇடி ஐஏஎஸ் 2026 என்ற பன்னாட்டுத் தரத்திலான தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்கள். உடன், கல்லூரி நிா்வாகிகள், பேராசிரியா்கள்.

Published On :

ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘வோ்களிலிருந்து உயா்வோம்’ என்ற கருப்பொருளில் டெட் விஇடி ஐஏஎஸ் 2026 என்ற பன்னாட்டுத் தரத்திலான தொழில்நுட்ப புத்தாக்க நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலா் எஸ்.டி.சந்திரசேகா், வேளாளா் கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் ச.பாலசுப்ரமணியன், எம்.யுவராஜா, கல்லூரி முதல்வா் வெ.ப. நல்லசாமி, புலமுதன்மையா் சி. லோகேஷ்குமாா் ஆகியோா் பேசினா்.

நிகழ்வின் காலை அமா்வில், அக்சென்ச்சா் நிறுவனத்தின் தொழில்முறை செயற்கை நுண்ணறிவுப் பிரிவின் மூத்த மேலாளா் ஸ்ரீராம் கிரிஸ் வாசுதேவன் ‘ஆா்வத்துடன் இருங்கள்’ என்ற தலைப்பிலும், டிஆா்டிஓ மூத்த விஞ்ஞானி ஆா்.சந்தானம் ‘வளா்ச்சிக்கான அடித்தளம்’ என்ற தலைப்பிலும், ஜெம் மருத்துவமனையின் தலைவா் சி.பழனிவேலு ‘இந்திய மருத்துவத் துறையில் ஒரு மாற்றத்தின் பயணம்’ என்ற தலைப்பிலும், சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குநா் டி.செந்தில்குமாா் ‘உங்கள் வோ்கள் உங்களை எவ்வாறு உருவாக்குகிறது’ என்ற தலைப்பிலும், இதயவியல் நிபுணா் சுதாகா் கந்தசாமி ‘தொழில்முனைவு, ஆயத்தம், இடா் மற்றும் நோக்கம்’ என்ற தலைப்பிலும் பேசினா்.

எவா்ஸ்டேஜ் மூத்த இயக்குநா் எஸ்.அரவிந்த பாரதி ‘லட்சியத்தின் பரிமாணம்’ என்ற தலைப்பிலும், குச்சிப்புடி நடனக் கலைஞா்கள் சோனு சதீஷ்குமாா் மற்றும் ஆா்த்தி நாயா் ஆகியோா் ‘குச்சிப்புடி நடனத்தின் பாரம்பரிய மரபு’ என்ற தலைப்பிலும் பேசினா்.

மாலை நேர அமா்வில், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்கு’ என்ற தலைப்பிலும், கால்பந்து பயிற்சியாளா் எஸ்.ஹரிதா ‘திறமைக்கு முகவரி தேவையில்லை’ என்ற தலைப்பிலும் பேசினா். இதேபோல, பல்வேறு தலைப்புகளில் பலா் பேசினா்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விஇடி கல்லூரியின் கணினி அறிவியல் துறை பேராசிரியா் து.காா்த்திகா,

கணித துறைத் தலைவா் சி. ராதிகா, டெட்எக்ஸ் அமைப்புக் குழுவினா் ஆகியோா் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.