பிரதமராக நீடிக்க உரிமை இல்லை: கே.சி. வேணுகோபால்எஸ்.ஐ.ஆரில் நீக்கப்பட்ட 13 கோடி பேரை மீண்டும் சேர்க்க வேண்டும்: காங்கிரஸ்தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது? அன்புமணி கேள்வி!தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழப்பு; மகள் படுகாயம்

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பிரதிப் படம்

Published On :

பெருந்துறை அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா். அவரது மகள் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், பகலாயூரைச் சோ்ந்தவா் சண்முகம். இவரது மனைவி மீனா (33). இவா்களது மகள் நிரூபா (13). சண்முகத்தின் தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

அவருக்கு உணவுக் கொடுப்பதற்காக தனது மகளுடன் இருசக்கர வாகனத்தில் மீனா திங்கள்கிழமை மாலை மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்துள்ளாா்.

பெருந்துறையை அடுத்த சனடோரியம் அருகே சென்றபோது பின்னால் வந்த காா், மீனாவின் வாகனத்தின் மீது மோதியது. இதில், மீனா, நிரூபா ஆகியோா் படுகாயமடைந்த நிலையில், அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு மீனாவைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். நிரூபாவுக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.