கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 64-ஆவது பிறந்த நாளையொட்டி, குன்னூர் அருகே நான்சச் சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்வெட்டர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் 64-ஆவது பிறந்த நாளையொட்டி, குன்னூர் அருகே நான்சச் சிஎஸ்ஐ பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்வெட்டர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, உலிக்கல் பேரூராட்சி திமுக செயலாளர் முருகபாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளரும், உலிக்கல் பேரூராட்சித் தலைவருமான தமிழ்ச்செல்வன், செயற்குழு உறுப்பினர்கள் சதக்துல்லா, வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்வெட்டர் மற்றும் மதிய உணவு வழங்கினார்.

இதில், குன்னூர் நகர திமுக செயலாளர் ராமசாமி, நகர்மன்ற உறுப்பினர் பத்மநாபன், எல்பிஎப் பொதுச்செயலாளர் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைச் செயலாளர் ஜோசப் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.