பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்

குன்னூர் புதுக்காடு ஆதிவாசி ஆரம்பப் பள்ளியில் சிட்சா தன்னார்வ அமைப்பு  சார்பில் பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

குன்னூர் புதுக்காடு ஆதிவாசி ஆரம்பப் பள்ளியில் சிட்சா தன்னார்வ அமைப்பு  சார்பில் பெண் குழந்தைகள் தினக் கொண்டாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், பெண் சிசுக் கொலையை தடுப்பது,பெண் கல்வியின் முக்கியத்துவம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கிராமப்புறங்களில் ஆயிரம் ஆண்களுக்கு 900 பெண்கள் என விகிதாச்சாரம் குறைந்து விட்டதாகவும்,  நகர்ப்புறங்களிலும் இதன் தாக்கம் இருப்பதாகவும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றோர் பேசினர்.  
இதில், சிட்சா பொறுப்பாளர்  லதா, ஓருங்கிணைப்பாளர்கள் ஜமிலா, அசுந்தா, பள்ளித் தலைமை ஆசிரியர் வசந்தகுமாரி, ஆசிரியர் உமாவதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இறுதியில், பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக  உறுதிமொழி ஏற்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com