விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

உதகை அரசு தலைமை மருத்துவமனையின் 150-ஆம் ஆண்டு நிறைவு விழா: ஏப்ரல் 7-ஆம்தேதி நடைபெறுகிறது

உதகை அரசு தலைமை மருத்துவமனையின் 150வது ஆண்டு நிறைவு  விழா, ஏப்ரல் 7-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

Updated On :5 ஏப்ரல் 2018, 6:55 am IST

உதகை அரசு தலைமை மருத்துவமனையின் 150வது ஆண்டு நிறைவு  விழா, ஏப்ரல் 7-ஆம்தேதி நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து உதகை அரசு தலைமை மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் இரியன் ரவிக்குமார், இருப்பிட மருத்துவ அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 உதகையிலுள்ள அரசு தலைமை மருத்துவமனை தற்போதுள்ள ஆவணங்களின்படி கடந்த 1867-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டதாக உள்ளது. 1865ஆம் ஆண்டில் அரசு நிதி ஒதுக்கீடாக ரூ.12,000மும்,  பொதுமக்களிடமிருந்து ரூ.3,000மும் நிதியாக பெறப்பட்டு இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.  தொடக்க காலத்தில்  இம்மருத்துவமனக்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு ஹைதராபாத் நிஜாம்கள்,  மைசூர் மகாராஜா உள்ளிட்டோர் உதவியுள்ளனர். அதன்பின்னர் செஞ்சிலுவைச் சங்கம், அரிமா சங்கம் ஆகியவற்றின் உதவியுடன் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. 
 இம்மருத்துவமனையை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மறைந்த முதல்வர் ஜெயலலிதா தரம் உயர்த்தினார். இம்மருத்துவமனையில் தற்போது 58 மருத்துவப் பணியிடங்களில் 40 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. ஆனால் மயக்க மருந்து நிபுணர், மகப்பேறு மருத்துவர் போன்ற பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாததால் சுழற்சி முறையில் வெளி மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் வந்து செல்கின்றனர். 
 இம்மருத்துவமனை தேசிய அளவில் தரம் உயர்த்தப்பட்ட அரசு மருத்துவமனைகளில் சிறப்பிடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் 6ஆவது இடத்தைப் பெற்றுள்ள இம் மருத்துவமனை சிறந்த  தூய்மை பராமரிப்புப் பணிகளுக்காக தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக காயகல்ப விருதையும் பெற்று வருகிறது.  இம்மருத்துவமனையில் தற்போது தினசரி 700 பேர் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். அதேபோல் உள் நோயாளிகளாக 200 பேர் உள்ளனர்.  376 படுக்கை வசதிகள் உள்ளன.  
இம்மருத்துவமனையில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக உதகையில் தற்போது மூடப்பட்டுள்ள எச்பிஎப் தொழிற்சாலை வளாகத்தை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக மாற்றித் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதற்கு சாதகமான பதில் அளிப்பதாக அரசும்  உறுதியளித்துள்ளது. 
 இம்மருத்துவமனையின் 150வது ஆண்டு நிறைவு விழா ஏப்ரல் 7-ஆம்தேதி உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெறுகிறது.  இதில்  மாவட்ட ஆட்சியர்  மற்றும் மாவட்ட  சுகாதாரத்துறை இணை இயக்குநர் உள்ளிட்டோர் முன்னிலையில் இம்மருத்துவமனையில் பணியாற்றி ஓய்வு பெற்ற மருத்துவர்கள், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட 150க்கும்  மேற்ப்பட்டோர் கவுரவிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.