குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் புதன்கிழமை ராட்சத மரம் விழுந்ததில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக பலத்த மழை பெய்தது.
இந்நிலையில் குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையின் குறுக்கே செவ்வாய்க்கிழமை மரம் விழுந்ததால் குரும்பாடி, மரப்பாலம் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
இந்நிலையில், குன்னூர் - உதகை சாலையில் அருவங்காடு பகுதியில் ராட்சத மரம் புதன்கிழமை இரவு விழுந்தது. அப்போது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வந்து மரத்தை வெட்டி அகற்றியப் பின் போக்குவரத்து சீரானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






