சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்பேரவைத் தேர்தல்! நச்சென பிரசாரத்தை நிறைவு செய்யப்போவது யார்?தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?2021 தேர்தலில் பல வித்தைகள் காட்டிய நோட்டா! இந்த முறை?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!திமுகவை வீட்டுக்கு அனுப்பும் கடைசிப் பிரசாரம்! சென்னையில் விஜய்! எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!
/

சு.திருநாவுக்கரசர் இன்று நீலகிரி வருகை

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) பங்கேற்க உள்ளார்.

Updated On :9 ஏப்ரல் 2018, 12:45 am

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு. திருநாவுக்கரசர் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் திங்கள்கிழமை (ஏப்ரல் 9) பங்கேற்க உள்ளார்.
உதகைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்த திருநாவுக்கரசர் அரசு விருந்தினர் மாளிகையில் தங்கிவிட்டு, திங்கள்கிழமை காலையில் அங்கு  உதகைப் பகுதி மக்களைச் சந்தித்துப் பேசுகிறார். அதையடுத்து, காலை 10 மணி அளவில்  கூடலூருக்குச் செல்லும் அவர் அங்கு நடைபெறவுள்ள தாழ்த்தப்பட்ட  மற்றும் பழங்குடியினருக்கான பாதுகாப்புச் சட்டத் திருத்த மசோதாவை கண்டித்து நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கிறார். 
பின்னர்,  கேரள முன்னாள்  முதல்வர் உம்மன் சாண்டி பங்கேற்கும்  செக்ஷன் 17 நிலப் பிரச்னை தொடர்பான கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருநாவுக்கரசர் பங்கேற்கிறார்.  பின்னர் அவர் மைசூரு வழியாக சென்னை திரும்பவுள்ளதாக உதகை சட்டப் பேரவை  உறுப்பினரும்,  நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஆர்.கணேஷ் தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.