உதகையில் கோடை சீசனையொட்டி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்புக்காக நீலகிரி மாவட்டத்தில் முதல் முறையாக சுற்றுலா போலீஸார் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
உதகையில் கோடை சீசனையொட்டி, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல் துறை, உதகை நகராட்சி சார்பில் போக்குவரத்தையும், வாகன நெரிசலையும் கட்டுப்படுத்த பல்வேறு விதமான உத்திகள் புதிதாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், எதிர்வரும் கோடை சீசனையொட்டி போக்குவரத்துப் பிரச்னைகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் உதகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது அவர் பேசியதாவது:
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளிடம் போலீஸார் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். இங்குள்ள பலரும் தங்களுக்கு உதவும் வகையில் நடந்து கொள்வார்கள் என்ற எண்ணத்தை சுற்றுலாப் பயணிகள் மத்தியில் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு வழிகாட்டுவதில் முறையாக நடந்து கொள்ள வேண்டும். கனிவான நடத்தை, கனிவான பேச்சு மூலமாக நீலகிரி போலீஸாரின் பெருமை பிற பகுதிகளுக்கும் பரவ வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்
பஜன்புரா மெட்ரோ நிலையம் அருகே தீப்பிடித்து எரிந்த வாடகை காா்

தில்லி மின் விநியோக நிறுவனங்களில் தீவிர தணிக்கையை தொடங்கிய: டிஇஆா்சி

பள்ளிச் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவரின் பிணையை ரத்து செய்ய உயா்நீதிமன்றத்தில் காவல்துறை வலியுறுத்தல்
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
