மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வு:  நீலகிரியில்  8,209 பேர் பங்கேற்பு

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.   

Updated On :18 ஏப்ரல் 2018, 6:53 am IST

நீலகிரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 10-ஆம் வகுப்பு அறிவியல் தேர்வில் 8,209 மாணவ, மாணவிகள் பங்கேற்று தேர்வெழுதினர்.   
தமிழகத்தில் நடைபெற்றுவரும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் 57 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அறிவியல் தேர்வில் 8,209 பேர் பங்கேற்று தேர்வெழுதினர். 112 பேர் தேர்வெழுத வரவில்லை.  
தனித்தேர்வர்களைப் பொருத்தமட்டில் தேர்வெழுத வேண்டிய 252 பேரில் 242 பேர் மட்டுமே தேர்வெழுதியுள்ளனர். 10 பேர் தேர்வெழுதவில்லை.  மாற்றுத்திறனாளி  மாணவர்களுக்கான அரசு தேர்வுத் துறையால் வழங்கப்படும்  சலுகைகளைப் பெற்று 46 மாணவ, மாணவியர் தேர்வெழுதியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.