அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜிநாமா, நகராட்சி நிா்வாகத் துறை பணி நியமன முறைகேடு வழக்குகளில் இன்று தீா்ப்புமேற்கு வங்கம், அஸ்ஸாமில் இன்று வாக்கு எண்ணிக்கை!மழை பாதிப்புகளை சரிசெய்ய 24 மணி நேர கண்காணிப்பு: அமைச்சா் என்.ஆனந்த் அறிவுரை ஜிஎஸ்டி அதிகாரிகளின் கைது அதிகாரம் ரத்து: ஜிஎஸ்டி கவுன்சில் ஒப்புதல்ராகுல் காந்தி நாளை சென்னை வருகை: மாணவா்களுடன் கலந்துரையாடுகிறாா்

நீலகிரி மலைப் பூண்டு  கொள்முதல் விலை வீழ்ச்சி: விவசாயிகள்  பாதிப்பு

நீலகிரி மலைப் பூண்டு வரத்து அதிகரிப்பாலும், வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்து உள்ளதாலும் உள்ளூர் பூண்டு கொள்முதல்

Published On :

நீலகிரி மலைப் பூண்டு வரத்து அதிகரிப்பாலும், வெளி மாநிலங்களில் இருந்து பூண்டு வரத்து அதிகரித்து உள்ளதாலும் உள்ளூர் பூண்டு கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.  
நீலகிரி மலைப் பூண்டு மருத்துவ குணமும், அதிக காரத் தன்மையும் கொண்டது. இதன் காரணமாக பொதுமக்கள் நீலகிரி மலைப் பூண்டை விரும்பி வாங்குவார்கள். மற்ற மாநிலங்களில் இருந்து கொண்டுவரப்படும் பூண்டை விட,  நீலகிரி பூண்டுக்கு 
மவுசு அதிகம். கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு, பனஹட்டி, கக்குச்சி, திருச்சிக்கடி, நெடுகளா, கேர்கம்பை, மடித்தொரை, பேரார் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பூண்டு பயிரிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு நீலகிரி பூண்டு கொள்முதல் விலை கணிசமாக அதிகரித்து கிலோ ரூ. 160 முதல்  ரூ. 170 வரை காணப்பட்டது.
அப்போது பூண்டு பயிரிட்டிருந்த விவசாயிகள் நல்ல லாபம் ஈட்டினர். 
இதன் காரணமாக இந்த ஆண்டும் விவசாயிகள் மலைப் பூண்டு பயிரிடுவதில் ஆர்வம் காட்டினர். ஆனால், இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஹிமாச்சலப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து மிகக் குறைந்த விலையில் தமிழகத்துக்கு பூண்டு விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. 
மேலும், உள்ளூரில் பூண்டு விளைச்சல் அதிகரித்துள்ளதாலும் தற்போது கிலோவுக்கு குறைந்தபட்சமாக கொள்முதல் விலை ரூ. 30 முதல் ரூ. 60 வரை மட்டுமே கிடைத்து வருகிறது.அறுவடைக் கூலிக்குக்கூட கட்டுபடியாகாத நிலையும், பூண்டு பயிரிட்டுள்ள பல தோட்டங்களில் அறுவடை செய்யாமல் விட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.