கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீலகிரி மாவட்ட நிர்வாகம், பல்வேறு அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள், தனியார் ஆகியோரால் ரூ.57 லட்சத்து 25 ஆயிரத்து 677 மதிப்பிலான நிவாரணப் பொருள்கள், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
கேரள மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மாவட்ட சமூக நலத் துறை, உதகை நகராட்சி, தோட்டக் கலைத் துறை சார்பில் கடநாடு, உல்லத்தி, இத்தலார், மீக்கேரி, சோலாடா, கேத்தி, கூக்கல்தொரை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுப்பண்ணைகள், உழவர் உற்பத்தி நலக் குழு, தோட்டக் கலைத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் சார்பில் உணவு பொருள்கள், துணிகள் உள்ளிட்ட பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், கேப்டன் கே.ஆர்.மணி, ஹோட்டல் ஜெம்பார்க் பணியாளர்கள், மாவட்ட ஹோட்டல் பார் அசோஷியேஷன், ஹோட்டல் மோனார்க், வருவாய்த் துறை அலுவலர்கள், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள், கக்குச்சி, பேலிதளா, அதிகரட்டி , ஆர்.கே.பி லைன், குந்தசப்பை ஊர் பொதுமக்கள், உதகை, கோத்தகிரி ஹோட்டல் அண்டு ரிசார்ட் சங்கம், உதகை உழவர்சந்தை டாக்ஸி ஓட்டுநர்கள் சங்கம், எல்லநள்ளி வியாபாரிகள் சங்கம், மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள், மருந்து வணிகர்கள், அத்தியாவசிய மருந்து பொருள்கள் சங்கம் உள்ளிட்டோர் என மொத்தம் ரூ.57லட்சத்து 25 ஆயிரத்து 677 மதிப்பில் நிவாரண பொருள்கள், நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து மூன்று மருத்துவ குழுக்கள் அங்குள்ள முகாம்களுக்குச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





