குன்னூர் டீசர்வ் தேயிலை ஏலத்தில் இரு வாரங்களில் சராசரி விலையில் கிலோவுக்கு ரூ. 5 வரை விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தேயிலை வர்த்தக அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
குன்னூர் டீசர்வ் ஏல மையத்தில், நீலகிரி கூட்டுறவுத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் தேயிலைத் தூள் ஏலம் விடப்படுகிறது. நடப்பு ஆண்டுக்கான 50 ஆவது ஏலத்தில், இலை ரகம் ஒரு லட்சத்து 84 ஆயிரத்து 380 கிலோ, டஸ்ட் ரகம் ஒரு லட்சத்து, 46 ஆயிரத்து 665 கிலோ என மொத்தம் 3 லட்சத்து 31 ஆயிரத்து 35 கிலோ விற்பனைக்கு வந்தது.
கடந்த இரண்டு வாரத்தில் 10 ஆயிரம் கிலோ மட்டுமே புதன்கிழமை வரத்து அதிகரித்து காணப்பட்டது. இரு இலை மற்றும் டஸ்ட் ரகங்கள் 99.90 சதவீதம் விற்பனையாகின. இருப்பினும் கிலோவுக்கு ரூ. 89.22 மட்டுமே சராசரி விலை கிடைத்தது.
இரு வார ஏலத்தை ஒப்பிடும்போது, கிலோவுக்கு ரூ.5 வரை சாராசரி விலை வீழ்ச்சி ஏற்பட்டது. மொத்தம் ரூ. 2 கோடியே 95 லட்சத்து 7,968 மதிப்பிலான தேயிலைத் தூள் விற்பனையானது.
இந்த விலை வீழ்ச்சியின் காரணமாக தேயிலை விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவி பாலியல் வன்கொடுமை: மேஸ்திரிக்கு 10 ஆண்டுகள் சிறை

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: கல்லூரிகளை தோ்வு செய்ய அவகாசம்

பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
தாயைக் கவனிக்காத மகன், மருமகள், பேத்தி மீது வழக்கு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


