பசுந்தேயிலைக்கு மாத விலையாக ரூ.14 வழங்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தென்னிந்திய தேயிலை வாரிய குந்தா இணை இயக்குநர் ரமேஸ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுந்தேயிலைக்கு பிப்ரவரி மாதத்துக்கு குறைந்தபட்ச கொள்முதல் விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ.14 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலையை அனைத்து தொழிற்சாலைகளும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
குறிப்பிட்ட விலை வழங்காத தொழிற்சாலைகள் குறித்து விவசாயிகள் தேயிலை வாரியத்துக்குத் தகவல் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேயிலை வாரியத்தின் வளர்ச்சி அலுவலர்கள், தொழிற்சாலை ஆலோசனை அதிகாரிகள், துணை இயக்குநர்கள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலை வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இதனை வழங்காத தேயிலை நிர்வாகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், கடந்த ஆண்டு இதே மாதத்தில் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.17 வழங்கப்பட்டிருந்து. ஆனால், இந்த ஆண்டு பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.14 வழங்கப்பட்டிருப்பது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.