ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கீழ்குந்தாவில் குடிநீர்ப் பற்றாக்குறை: நீர்த்தேக்கங்களைத் தூர்வார கோரிக்கை

மஞ்சூர் அருகேயுள்ள கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நீர்த்தேக்கங்களைத் தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:40 am

DIN

மஞ்சூர் அருகேயுள்ள கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நீர்த்தேக்கங்களைத் தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கீழ்குந்தா பேரூராட்சிக்கு உள்பட்ட கிராமங்களானஅம்மக்கல், ஊசிமலை, கட்லாடா, அப்புனாய், ஒசாட்டி உள்ளிட்ட பகுதிகளிலுள்ள நிர்த் தேக்கங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால், பெரும்பாலான நீர்த் தேக்கங்களும் பல ஆண்டுகளாகக் தூர்வாராமல் உள்ளன. சேறும், சகதியுமாக உள்ளதால் குறைந்த அளவே தண்ணீர் சேமிக்கும் நிலை உள்ளது. 
மேலும், இந்த நீர்த் தேக்கங்களில் குடிநீர் வசதிக்காக பதிக்கப்பட்ட குழாய்கள் துருப்பிடித்துள்ளன. எனவே, மஞ்சூர் உள்பட பேரூராட்சியின் பல வார்டுகளிலும் குடிநீர்ப் பிரச்னை உள்ளது. சில பகுதிகளில் தினசரி ஒரு மணி நேரமும், ஒருசில இடங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 
எனவே, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண அம்மக்கல், ஊசிமலை உள்ளிட்ட அனைத்து நீர்த் தேக்கங்களையும் தூர்வாரி புதிய குழாய்கள் அமைத்து தடையில்லாமல் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள பேரூராட்சி நிர்வாகம் நடவடிககை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.