அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

கலப்படத் தேயிலையை கட்டுப்படுத்தக் கோரிக்கை

நீலகிரியில் ஆர்.சி. எனப்படும் தேயிலைத் தூள் கழிவைப் பயன்படுத்தி, தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:07 am

DIN

நீலகிரியில் ஆர்.சி. எனப்படும் தேயிலைத் தூள் கழிவைப் பயன்படுத்தி, தேயிலைத் தூள் உற்பத்தி செய்வதை முற்றிலும் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. 
நீலகிரியின் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் தேயிலைத் தொழில், சமீப காலமாக  விலை வீழ்ச்சியால்  தள்ளாடி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு விவசாயிகள் வழங்கும்  பசுந்தேயிலை மூலம், 160-க்கும் மேற்பட்ட சிறு தேயிலைத் தொழிற்சாலைகள், தேயிலைத் தூள் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. 
இவற்றில்  40-க்கும் குறைவான சிறு தேயிலைத் தொழிற்சாலைகள் மட்டுமே தரமான உற்பத்தியைச் செய்துவருகின்றன. அதன்மூலம் பசுந்தேயிலைக்கும்  உரிய விலை வழங்கி வருகின்றன.   
"ரீ கண்டிஷன்' எனப்படும்  "ஆர்.சி.'  தேயிலைத் தூளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் தேயிலைத் தூளின் தரம் குறைவதால்,  இதுபோன்று சாயம்  கலந்து விற்கப்படும் கலப்படத் தேயிலையைப் பயன்டுத்துவோருக்கு பல்வேறு உடல் உபாதைகள்  ஏற்படுவதா குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   எனவே தரமான தேயிலைத் தூளை உற்பத்தி செய்வதை தேயிலைத் தொழிற்சாலை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும். இதனை தேயிலை வாரியம்  உன்னிப்பாகக் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்  என்பதே இங்குள்ள விவசாயிகளின்  எதிர்பார்ப்பாக  உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.