திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

குந்தா கோத்தகிரியில்  கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா

மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கிராமத்தில், கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:06 am

DIN

மஞ்சூர் அருகே உள்ள குந்தா கோத்தகிரி கிராமத்தில், கோத்தர் இன மக்களின் விதைப்புத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
மஞ்சூர் அருகே குந்தா கோத்தகிரி கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் நீலகிரி மாவட்டத்தில் முதன்முதலாக கோத்தர் இன மக்கள் தோன்றிய கிராமம். நீலகிரி மாவட்டத்தில் தற்போது குந்தா கோத்தகிரி, கொல்லிமலை, சோலூர், கோக்கால், திருச்சிக்கடி, புது கோத்தகிரி, கீழ் கோத்தகிரி, கூடலூர் கோக்கால் ஆகிய 7 கிராமங்களில் கோத்தர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். 
குந்தா கோத்தகிரியில் தற்போது சுமார் 100-க்கு மேற்பட்ட கோத்தர் இன மக்கள் வசிக்கின்றனர். இவர்கள் குலதெய்வமான அய்யனோர் அம்மனோரையை வழிபட்டு வருகின்றனர். 
இவர்களது இந்த ஆண்டுக்கான விதைப்புத் திருவிழா கடந்த திங்கள்கிழமை துவங்கியது.  குந்தா கோத்தகிரியில் இரவு 9 மணிக்கு ஓடையில் கிராம மக்கள் குளித்துவிட்டு, உடைத்த விறகு மூலம் தீ மூட்டி அதில் வரும் அக்னியை வழிபட்டு மீண்டும் வீடு திரும்பினர். 
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு அய்யனோர் அம்மனோரை கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினர். பின்னர் 9 மணிக்கு கிராம மக்கள் இணைந்து சென்று விளைநிலங்களில் சாமைப் பயிரை விதைத்தனர். 
பிறகு, பகல் 11 மணிக்கு கோயில் பூசாரி வீட்டுக்கு வந்து உணவு அருந்திய பின்னர், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்று உணவு அருந்தினர். புதன்கிழமை மதியம் 3 மணியளவில் அய்யனோர் அம்மனோரை கோயிலுக்குச் சென்று சூரிய நமஸ்காரம் செய்தனர். 
பின்னர் மதியம் 3 மணிக்கு கிராம ஓடையில் நீராடி, கலாசார உடை அணிந்து குந்தா கோத்தகிரி கிராம மக்கள் மீண்டும் வீடுகளுக்குச் சென்றனர். விதைப்புத் திருவிழா நடைபெற்ற 3 நாள்களாக கிராம மக்கள் ஊர் எல்லைக் கோட்டைத் தாண்டாமல் கிராமப் பகுதியிலேயே இருந்தது குறிப்பிடத்தக்கது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.