கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தில் நவீன அங்கன்வாடி மையம்
கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.


கூடலூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில் நவீன அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கூடலூர் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட பாக்கனா பகுதியிலுள்ள பழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் செலவில், ஊராட்சி ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நவீன அங்கன்வாடி மையம், குழந்தைகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
ஊரகத்தில் தனியார் பள்ளிகளே இல்லாத பகுதியில் இதுபோன்ற மையம் அமைந்திருப்பது மக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. அழகிய தோற்றத்துடன் கூடிய கட்டமைப்பு, சுவர்களில் குழந்தைகளைக் கவரும் வண்ணங்களுடன் கூடிய படங்கள், எழுத்துகள் அமைக்கப்பட்டுள்ளன.
குழந்தைகள் படங்களைப் பார்த்து கற்கும் முறையில் அங்கன்வாடி அமைந்துள்ளது. இது குழந்தைகளின் மனதில் எளிதில் பதியும் வகையில் அமைந்துள்ளதால், அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...