உதகையில் சாலையில் கிடந்த 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

உதகையில் போக்குவரத்து நெரிசல் மிக்க கமர்ஷியல்  சாலையில் கேட்பாரற்று கிடந்த 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
Updated on
1 min read

உதகையில் போக்குவரத்து நெரிசல் மிக்க கமர்ஷியல்  சாலையில் கேட்பாரற்று கிடந்த 100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
உதகை, கமர்ஷியல் சாலையில் நடைபாதை அருகே 4 பைகளில் அரிசி வைக்கப்பட்டிருந்ததை புதன்கிழமை பார்த்த பொதுமக்கள் உடனடியாக  உதகை வட்டாட்சியர் அலுவலகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.  
இதையடுத்து உடனடியாக அங்கு வந்த அதிகாரிகள் அரிசியை சோதனையிட்டபோது அது ரேஷன் அரிசி என்பது தெரியவந்துள்ளது. 
இதைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்களிடம் விசாரித்ததில் அந்த அரிசியை அங்கு வைத்தது யார் என்ற விவரம் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து  4 மூட்டைகளில் தலா 25 கிலோ வீதம் வைக்கப்பட்டிருந்த  100 கிலோ அரிசியைக் கைப்பற்றிய அதிகாரிகள் அவற்றை நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். இதுதொடர்பாக  உதகை வட்ட வழங்கல் அலுவலரிடம் தொடர்பு கொண்டபோது,  அவர் தகவல் ஏதும் தெரிவிக்காததால்  கூடுதல் விவரங்கள் ஏதும் கிடைக்காததோடு,  இதுதொடர்பாக வழக்குப் பதியப்பட்ட விவரமும் கிடைக்கவில்லை. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com