நீரோடைகள் வற்றியதால் மலைக் காய்கறி பயிர்கள் பயிரிடுவதில் பாதிப்பு

குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீரோடைகள் வற்றியதால் மலைக் காய்கறிகள் பயிரிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
Updated on
1 min read

குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நீரோடைகள் வற்றியதால் மலைக் காய்கறிகள் பயிரிடுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 
குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட  பல்வேறு  இடங்களில்  பல ஏக்கரில் மலைக் காய்கறி பயிர் செய்யப்பட்டு வருகிறது. 
குறிப்பாக, கேரட், முட்டைகோஸ், முள்ளங்கி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.
இங்குள்ள பிரதான நீரோடைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லாததாலும், தூர்வாரப்படாததாலும் தண்ணீரை விவசாயிகள் அந்தந்த தோட்டங்களில் அமைக்கப்பட்ட தண்ணீர்த் தொட்டியில் சேமித்து மோட்டார் உதவியுடன் பாய்ச்சி வருகின்றனர்.
தற்போதுள்ள சூழலில் இருக்கும் நீராதாரங்களை தூர்வாரி மலைத் தோட்ட  விவசாயத்துக்குத் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com